கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!
Wednesday, September 15th, 2021
கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 605 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 27 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் தொற்றுக்குள்ளாகிய 55 ஆயிரத்து 288 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 94 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 567 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரயில் நிலையங்களில் Wi-Fi வலயங்களை நிறுவ தீர்மானம்!
தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!
|
|
|


