கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தாலும் அவர்களுக்கு அது மீண்டும் ஏற்படும் சாத்தியம் – உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Wednesday, April 22nd, 2020

கொரோனா நோயால் பீடிக்கப்பட்டு அதில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அந்த நோய் தொற்றாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவம் இல்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொற்றுநொயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் மரியா வென் கெர்ச்சீஃப், ஜெனீவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் இதனைக் கூறியுள்ளார்.

பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எதிர்ப்புடலைப் பெற்றுவிடுவதாகவும், அதனால் அவர்களுக்கு மீண்டும் இந்தநோய் தொற்றாது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு விஞ்ஞானப்பூர்வமான ஆதாரங்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

எனவே இந்த நோயினால் ஒருமுறை பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் மீண்டும் அந்த நோய்தொற்றலுக்கு உள்ளாக மாட்டார் என்று உறுதியாக கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, உலக அளவில் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 25 இலட்சத்து 5 ஆயிரத்து 443 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் இலட்சத்து 59 ஆயிரத்து 633 பேர் குணமடைந்துள்ளனர்.

கொவிட் 19 நோய்த் தொற்றின் காரணமாக இதுவரையில் உலக அளவில் 1 இலட்சத்து 72 ஆயிரத்து 321 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: