கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்தைக் கடந்தது!

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்த 637ஆக பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 10 ஆயிரத்து 616 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 ஆயிரத்து 214 பேர் கடந்த 24 மணிநேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 78 ஆயிரத்த 259 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே இலங்கையில் கொரோனா தொற்றால் இதுவரை ஆயிரத்து 789 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையில் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள இரண்டு வங்கிகளுக்கு அனுமதி?
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...
நாடகங்கள் வெறும் கூத்து அல்ல - நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் ம...
|
|