கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்டால் மாத்திரமே முழுமையான பலனை பெறமுடியும் – இராணுவத் தளபதி !

Thursday, February 25th, 2021

கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்ற பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிக தன்னம்பிக்கை கொள்ளக்கூடாது என்று இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா முதல் டோஸ் எடுத்துக்கொள்வது கொரோனா வைரஸிலிருந்து எவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்காது. இரண்டாவது டோஸ் பெற்றுக்கொண்டால் மாத்திரமே இது முழுமையடையும்.

எனினும் முதல் டோஸைப் பெற்ற மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

இந்தியா நன்கொடையாக அளித்த தடுப்பூசிகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகளின் புதிய பங்குகள் பெறப்பட்ட பிறகு இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீண்ட வார இறுதி விடுமுறை வருவதால், மக்கள் கொழும்பிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளனர். எனினும் நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: