கொரோனா சிகிச்சைக்காக பத்து நாட்களுக்கள் பத்தாயிரம் கட்டில்களுடன் கூடிய சிகிச்சை நிலையங்கள் – ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ!
Saturday, May 8th, 2021
பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ – கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பத்தாயிரம் கட்டில்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் மேலதிக சிகிச்சை நிலையங்களை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான கட்டில்களும் உபகரணங்களும் வழங்கப்படும்.
இதன் பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கு வழங்கப்படும். இலங்கை பொறியியலாளர் முன்னணி வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளது என்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


