கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு – மூன்றாவது நாழும் முற்றாக முடங்கிய நிலையில் இலங்கை!

Sunday, May 16th, 2021

நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் மூன்றாவது நாளாக இன்றைய தினமும் முழுமையாக நடைமுறையில் இருந்துவருகின்றது..

கொரோனா பரவலை தடுப்பதற்காக, பிறப்பிக்கப்பட்ட இந்த பயணக் கட்டுப்பாடுகள்,  நாளை 17 ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நிறைவடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனினும், நாளை தொடக்கம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில், ஒவ்வொரு நாளும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை, பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள காலத்தில், பொதுமக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக, கொழும்பு உட்பட  நாட்டின் பல பகுதிகளில், இராணுவத்தினர் உந்துருளிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸாரும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

"எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்...
கூட்டமைப்பின் உறுப்பினர் கொண்டுவந்த பிரேரணையால் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்குள் சண்டை - வேலணை பிரத...
பதிவு செய்துள்ளவர்கள் தாம் பதிவு செய்துள்ள நாளுக்கு, அடுத்த நாள் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பிர...