கொரோனா அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் கடன் கோரிக்கைக்கு மத்திய வங்கி ஒப்புதல்!

Monday, October 19th, 2020

கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.

செளபாக்யா கொவிட்-19 புனர்வாழ்வு கடன் திட்டத்தின் கீழ் 177.9 பில்லியன் ரூபாய் கடன், மூன்று கட்டங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளின் ஊடாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 133 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று அச்சுறுத்தலின் 2 ஆம் அலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகளவு வணிக நிறுவனங்களே பாதிக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்களின் பாதிப்பு நாட்டின் தேசிய பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பெரும்பாலான கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையிலேயே, வணிக நிறுவனங்களிலிருந்து கோரப்பட்ட கடன் விண்ணப்பங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


“சைனோபாம்” இரண்டாவது தொகுதி தடுப்பூசிகளை இன்றுமுதல் வழங்க நடவடிக்கை – சுகாதார தரப்பினருக்கு ஜனாதிபதி...
முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்ட அனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசியை உரிய காலத்தில் பெற்றுக்கொடுங்க...
நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக...