கொரோனா அச்சுறுத்தலால் யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலய அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
Monday, December 14th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் கல்வி வலயங்களுக்கு உள்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய கல்வி அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் மாகாண ஆளுநரின் அனுமதியுடன் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட 104 பாடசாலைகளும் வலிகாமம் கல்வி வலயத்துக்கு உள்பட்ட 147 பாடசாலைகளும் என மொத்தமாக 251 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் கடல் பாதுகாப்பு மேம்பாட்டிற்கு ஜப்பான் நிதியுதவி!
வியட்நாம் பிரதமருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை!
இன்றுமுதல் ஆணையர்கள் மற்றும் செயலாளர்களின் தலைமைல் பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை முன்னெடுக்கும் -...
|
|
|


