கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Monday, October 12th, 2020

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து முடக்கப்பட்ட தீவகத்தின் வேலணை பிரதேசத்தின் புங்குடுதீவு, மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய பிரதேசங்களின் பல்வேறு கிராமங்களிலும் முடக்க நிலையில் வாழும் மக்களின் அவசிய தேவை கருதி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினமும்  சமைத்த உணவு மற்றும் உலருணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசி பொருட்கள் வழங்கவைக்கப்பட்டன.

குறித்த உணவு பொருட்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலக  நிர்வாக செயலாளர் தோழர் வசந்தன் தலைமையில் ஊர்காவற்றுறை பிரதேசசபை தவிசாளர் ஜெயகாந்தன்  வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் குறித்த பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் உணவுப் பொருட்களை இன்றையதினம் (12) கையளித்திருந்தனர்.

முன்பதாக மினுவாங்கொடாவில் உள்ள பிராண்டிக்ஸ் கார்மென்ட் நிறுவனத்தின் ஊழியர்களூடாக தற்போது நாடு முழுவதும் கொரோன தொற்றின் இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புங்குடுதீவு பகுதியில் கடந்தவாரம் இந்நோயின் தாக்கத்தடன்  யுவதி  ஒருவர் அடையாளர் காணப்பட்டிருந்தார்.

இதையடுத்து சுகாதார தரப்பினரது ஆலோசரைனக்கு அமைவாக புங்குடுதீவில் 1212 குடும்பங்களை சேர்ந்த 3915 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.  அத்துடன் வேலணை பிரதேசத்திலும் சுகாதர தரப்பினரால் 57 பேர் தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த குடும்பங்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்துகொடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றையதினமும்  தீவகத்தின் வேலணை ஊர்காவற்றுறை அகிய பிரதேசங்களில் முடக்க நிலையில் வாழும் மக்களுக்கு  உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்ட்டதுடன் மக்களது பிரச்சினைகள் தொடர்பிலும் அதிகரிகளிடம் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: