கொரேனா தொற்றால் இதுவரை 14 கர்ப்பிணிகள் உயிரிழப்பு – 2 ஆயிரத்து 404 தாய்மார்களுக்கும் தொற்றுறுதி என குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவிப்பு!

Saturday, July 31st, 2021

நாட்டில் முதலாவது கொரோனா அலையில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 404 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தொற்றுறுதியானதாக குடும்ப நல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அதன் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா, சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இதுவரையில் 14 கர்ப்பிணித் தாய்மார்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் அனைவரும் மூன்றாம் கொவிட் 19 அலையினாலேயே மரணித்தனர் என்றும் தெரிவித்த அவர் இவ்வாறு உயிரிழந்தவர்களில் பலருக்கு அதி உயர் குருதி அலுத்தம், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணித்தாய்மார்களே கொவிட்19 நோயினால் உயிரிழந்ததாகவும் குடும்ப நல சுகாதார பணியகத்தின் சித்ரமாலி டி சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: