கொரிய பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே கலந்துரையாடல் – அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில் கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்!
Thursday, August 10th, 2023
கொரியா அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இது உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு உதவியாகவும் , விவசாயிகளுக்கு சிறந்த விற்பனை விலையின் மூலமாக வருமானம் ஈட்டக் கூடியதாகவும் அமையும்.
மேலும் மலையகத்திற்கு, இதன் ஊடாக விநியோகத்தை ஆரம்பிப்பது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ். மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கான முன்னேற்பாடு தொடர்பான கல...
30 ஐ தாண்டினால் அமைச்சரவையை ஜனாதிபதி நிராகரிக்கலாம் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்!
ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !
|
|
|


