கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மக்களின் பாவனைக்காக கையளிப்பு!

Monday, April 8th, 2024

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (08) மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நிர்மானப் பணிகளை செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் இந்த முழுமையான திட்டத்திற்கு 5278 கோடி 81 இலட்சத்து 272 ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்கள், வைத்தியசாலைகள், மத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைக் கொண்ட மிகவும் பரபரப்பான வர்த்தக நகரமான கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரத கடவையின் காரணமாக  நாளாந்தம் 03 மணித்தியாலங்கள் விரயமாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மாகா பொறியியல் (Maga Engineering) நிறுவனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: