கொட்டி தீர்க்க போகும் கனமழை – வடக்கு மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Wednesday, May 3rd, 2023

நாட்டில் தற்போது காணப்படும் மழை நிலைமையை அடுத்த சில நாட்களுக்கு எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலுக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் மி.மீ. 100 வரை பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில், சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிக மழைவீழ்ச்சி பெறப்படும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: