கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி!
Thursday, March 8th, 2018
கொழும்பு கொட்டாஞ்சேனை பிலிங் வத்தையில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பழ வியாபாரிகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வீட்டுக்கு அருகில் உரையாடிக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் ரி.56 ரக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த, சமந்த பிரதீப், மிலான் மதுசங்க, ஜயரத்ன ஆகியோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சம்பவம் குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம் - இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்...
160 ரயில் பெட்டிகளில் 103 பயன்பாட்டில் இல்லை - காரணத்தை கண்டறிய "கோபா" குழு பணிப்பு!
முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர் - ஜனாதிபதி ரணி...
|
|
|


