கொடிகாமம் பேருந்து நிலையம் ஏ9 வீதியுடன் இருக்க வேண்டும் – பொதுமக்கள்!

Tuesday, September 25th, 2018

கொடிகாமம் பொதுச்சந்தையை புதிய மாதிரிப் பொதுச்சந்தையாக அமைக்கும் போது கொடிகாமம் பேருந்து நிலையத்தை ஏ9 முதன்மைச் சாலையுடன் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்படல் வேண்டும். இவ்வாறு கொடிகாமம் பொதுச் சந்தையை புதிய வடிவில் அமைப்பதற்கென உருவாக்கப்பட்ட வரைபடத்தை இறுதியாக்குவது தொடர்பாக சாவகச்சேரி பிரதேச சபை மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டோரால் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2000 ஆம்ஆண்டுக்குப் பின்னர் கொடிகாமம் சந்தை அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருவதால் மக்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு கடைத் தொகுதிகள் சந்தை விற்பனை பிரிவுகள் போன்றவை அமைக்கப்படல் வேண்டும். இவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக தற்போது கொடிகாமம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்திற்கு சந்தையின் தேங்காய் விற்பனைப் பிரிவு மற்றும் கடலுணவுகள் விற்பனைப் பிரிவுகளை மாற்றி பேருந்து நிலையத்தை ஏ-9 முதன்மைச் சாலையுடன் இணைந்த நிலையில் அமைக்கப்படுவது கட்டாயமாக உள்ளது. என கலந்துரையாடலுக்கு வருகை தந்தவர்களால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வடமராட்சி கிழக்கு மருதங்கேணிப் பிரதேச செயலர், பிரதேச சபை உறுப்பினர்கள், அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts: