கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீர் கொரோனா பரிசோதனை !

கொடிகாமத்தில் நேற்று காலை திடீரென 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொடிகாமம் பேருந்து தரிப்பிடத்தின் மேல் தளத்தில் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனைகளை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மேற்கொண்டிருந்தனர். கொரோனா சமூகப் பரவலை இனங்காணும் நோக்கில் தென்மராட்சிப் பகுதியில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
இதன் ஆரம்பமாக அண்மையில் சாவகச்சேரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் புதிய ஒழுங்கமைப்பு !
பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது - இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை ஜனா...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!
|
|