கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா!
Thursday, June 13th, 2019
பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று(13) இடம்பெறவுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், இன்று திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் புனரமைக்கப்பட்ட, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் நேற்று(12) மீண்டும் திறக்கப்பட்டது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டைகையின் தலைமையில், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று மாலை விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
Related posts:
தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?
முதியோர் இல்லத்தில் முதியோரை இணைப்பது தற்காலிக நிறுத்தம்!
பரீட்சைக்கு முன்பதாகவே வெளியாகும் விடயங்கள் - முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா!
|
|
|


