கைவிரல் அடையாள நடைமுறையை எதிர்த்து வவுனியாவில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!
Wednesday, September 2nd, 2020
வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்களால் ஆர்ப்பாட்டமும், பணிபுறக்கணிப்பும் இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
வைத்தியசாலை வளாகத்தில் காலை 9 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டம் காலை 10 மணிவரை இடம்பெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவித்த போது, தமது பணி நடவடிக்கைகளிற்கு இடையூறு ஏற்பட்டுத்தும் வகையில் கைவிரல் அடையாள நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனை தவிர்த்து பழையமுறையின்படியே தாங்கள் கையொப்பம் இடுவதற்கான செயற்பாட்டை தொடரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதுடன், தமது கோரிக்கை நிறைவேறாவிடில் போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரிந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரச சட்டங்கள் அனைவருக்கும் சமன், எமக்கு மட்டும் ஏன் இந்த அநீதி, மன அமைதியுடன் பணிசெய்ய விடு போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பால்மாவில் பன்றி எண்ணெய் மற்றும் பார்ம் ஒயில்!
எதிர்கட்சியை சேர்ந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவு?
போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்டறிவதற்காக சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் நடைமுறை!
|
|
|


