கைவிடப்பட்டது தனியார் பேருந்து புறக்கணிப்பு!
Sunday, July 3rd, 2016
தனியார் பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்றது.
பேருந்து கட்டண அதிகரிப்பு தொடர்பாக உரிய தீர்வினை பெற்று கொடுக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் இதற்கான முடிவினை உரிய அதிகாகளுடன் கலந்துரையாடி பெற்று தருவதற்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் ஜனாதிபதி இதன்போது கேட்டு கொண்டுள்ளார்.
இதனையடுத்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட இருந்த தனியார் பேருந்து சேவை பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அன்ஜன பிரியந்த குறிப்பிட்டார்.
இந்த பணி பகிஷ்கரிப்பு காரணமாக மக்கள் எதிர்நேக்கும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதியின் வேண்டு கோளுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
நீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படும் - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் - வெளியானது...
பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்வதுஅவசியம் ...
|
|
|


