பொருளாதார நெருக்கடிக்கு நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்வதுஅவசியம் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்து!

Thursday, November 23rd, 2023

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால், நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதற்கு வரி செலுத்தாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அதற்கான வேலைத்திட்டத்தை இந்த வருடம் முதல் ஆரம்பிக்க உள்ளோம். 70 சதவீதமாக காணப்பட்ட நாட்டின் பணவீக்கம் தற்போது -2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் டிஜிட்டல் மயமாக்கலுக்காக இந்த முறையும் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பாதீட்டில் விவசாய நவீன மயப்படுத்தலுக்காகவும் கல்வி துறைக்காகவும் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: