கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது – அமைச்சர் நாமல் திட்டவட்டம்!

Saturday, February 12th, 2022

தானும் சிறை சென்றதாகவும் கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அல்லது வேறு சர்வதேச அமைப்பினருக்கு தேவையான வகையில் அரசாங்கம் கைதிகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடையில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்பதற்காக ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது. அரசதலைவரின் கொள்கை அறிக்கையில் இது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுதான் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளிப்பது. சிறைச்சாலையில் காணப்படும் இடநெருக்கடியை தீர்வு காண்பது குறித்தும் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பலர் எந்த வழக்குகளும் இன்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை அப்படியே வைத்திருக்க முடியாது. இது அநீதி.

நானும் சிறை சென்றேன். இந்த கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்தேன். கிராமத்தில் கையை வெட்டியவர் சிறையில். கடந்த ஆட்சிக்காலத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றவர்  அரச தலைவரின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டார்.

கையை வெட்டியவரை சிறையில் வைத்துக்கொண்டு என்ன செய்வது. ஜெனிவாவோ வேறு நாட்டின் தேவைக்காக நாங்கள் அரசியல் முடிவுகளை எடுக்க மாட்டோம். நாங்கள் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தோம் என்பதை முழு உலகமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

அதனை விரும்பாத நாடுகளும் இருக்கின்றன. விரும்பாதவர்களுக்கு நாங்கள் என்ன செய்தாலும் விருப்பமில்லை. அவர்களுடன் நட்பாக முடியாது எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: