கைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்ததுமுடிவு!
Thursday, July 21st, 2016
கடந்த 18 ஆம் திகதி முதல் யாழ்ப்பாண சிறைகளிலுள்ள கைதிகள் ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக இவர்கள் சிறைத்தண்டனைப் பெற்று வருவதாகவும், மிகநீண்ட நாட்களாக சிறையில் உள்ள இவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் உண்ணாவிரதத்தை முன்னெடுத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் குறித்த கைதிகள் தமது போராட்டத்தைக்கைவிட்டு உணவு உண்ண ஆரம்பித்துள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
Related posts:
பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்தும் என்டிஜன் பரிசோதனை - பிரதி பொலிஸ் மா அதிபருமான ...
சிறந்த நிர்வாக சேவை அதிகாரி சிவஞானசோதி காலமானார்!
தங்கம் மற்றும் இலத்திரனியல் பொருள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்...
|
|
|


