கெரவலப்பிட்டிய மின் ஆலையை அமெரிக்காவுக்கு வழங்க ஒப்பந்தம் கைச்சாத்து – மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!

Friday, September 24th, 2021

கெரவலப்பிட்டிய மின் ஆலையில் 40 சதவீதத்தை அமெரிக்காவின் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டுள்ளதாக மின் சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த நிறுவனங்களுக்கு அதைச் செய்யக்கூடிய வலுவான சக்தி இருப்பதால் குத்தகைதாரர்களை அழைக்காது அந்த நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் காரணம் இரு தரப்பினருக்கும் வசதியான நேரத்தில் என்பதால் என்றும் நாசா அதைச் செய்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது எவரும் அறியாமல் செய்த கைச்சாத்து இல்லை என்றும் அமைச்சரவைப் பத்திரத்தில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை அனுமதியுடன் கைச்சாத்திடப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் தற்போது சிறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றும் அமைச்சரவையில் அவ்வாறு எந்தக் குற்றச் சாட்டும் முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முடிந்துவிட்டது என்றும் அது குறித்து மறைக்க எதுவும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: