கூராய் கிராமம் ஆபத்தில் கூட்டமைப்பு ஏன் மௌனம் காக்கிறது – மக்கள் கேள்வி!

Saturday, May 13th, 2017

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு இது வரையில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்தபிரதேச செயலர் பிரிவின் கீழான கூராய் கிராமத்தில் 85 குடும்பங்கள் வாழ்ந்துவரும் நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றது.

இக்கிராமத்தின் கூராய் மற்றும் சேதுவிநாயகர் குளம் ஆகிய இரண்டு குக்கிராமங்கள் இருக்கின்ற நிலையில் அங்கு காணப்படுகின்ற ஆற்றுப்படுக்கைகளில் தொடர்ச்சியாக மணல் அகழப்பட்டு வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்துநிறுத்தி தமது கிராமத்தை பாதுகாக்குமாறு மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிலும், மாவட்டச் செயலகத்திலும் பல தடவைகள் முறையிட்ட போதிலும், இதுவரையில் உருப்படியாக எந்த நடவடிக்கைகளும்; முன்னெடுக்கப்படவில்லை யென்றும் மக்கள் கவலை தெரித்துள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்காத பட்சத்தில் கிராமத்தின் வளங்கள் முற்றாக அழியும் ஆபத்து இருக்கும் அதேவேளை, ஆற்றுப்படுக்கைகள் அழமாக்கப்படும் போது குடிநீர்க் கிணறுகளில் நீர் வற்றும் அபாயம் உள்ளதாகவும், இதன்காரணமாக குறித்த கிராமத்தில் உவர் பரவிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே தமது வாக்குகளை சூறையாடி வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் தம்மை ஏமாற்றி வருவதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கற்பித்தல் நேர அட்டவணை மாற்றத்துடன் எதிர்வரும் 29 ஆம் திகதிமுதல் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் வழமைக...
கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி...
நாட்டில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை - கல்வி அமைச்...