கூட்டு நடவடிக்கை அவசியம் – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!
Friday, August 12th, 2022
இலங்கையை மீட்பதற்கு கூட்டு நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு இதனை வலியுத்தியுள்ளது.
சிவில் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு, கருத்து சுதந்திரம் என்பன மிகவும் முக்கியமானவை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜிஎஸ்பி பிளஸ், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகிய மூன்று முக்கிய நடைமுறைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அவர்கள் வலியுத்தியுள்ளனர்.
இந்த செயற்பாடுகள் வெற்றியடைய இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானி நியமனம்!
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்பு!
பகிடிவதையில் ஈடுபட்ட மாணவன் பல்கலைக்குள் உள்நுழையத் தடை - விடுதியை விட்டு வெளியேறவும் பணிப்பு!
|
|
|


