கூட்டுறவுச் சங்கங்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு கூ. அபி. திணைக்களம்!

Saturday, February 10th, 2018

 

கூட்டுறவு சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அதன் அபிவிருத்தி தொடர்பாக கண்காணிக்கும் நடவடிக்கையில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

கூட்டுறவின் 2018 ஆம் ஆண்டிற்கான பரிணமிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் போதிய செயற்பாடுகள் இன்றி கூட்டுறவு அமைப்புக்களை இனம் காணும் முன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு நேரில் சென்று அதன் செயற்பாடுகளை பார்வையிட்டார். அத்துடன் கூட்டுறவு சங்க நிர்வாகத்தினரையும் சந்தித்து சங்கங்களில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.

முல்லைத்தீவு பழச்செய்கையாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கும் சென்று அதன் செயற்பாடுகள், உற்பத்திகள் தொடர்பான திணைக்களம் ஆராய்ந்ததையும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது.

இதேபோல் வடக்கு மாகாணத்திலுள்ள சகல கூட்டுறவு அமைப்புக்களுக்கும் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் நேரடியாக சென்று செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதேசமயம் வடக்கில் இயங்காது இருக்கும் கூட்டுறவு உற்பத்தி நிலையங்களையும் தொழிற்சாலைகளையும் படிப்படியாக மீளவும் திறந்து வைக்கவும் திணைக்களம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Related posts: