கூட்டமைப்பினர் குழப்பங்களை ஏற்படுத்தியிருந்தபோதிலும் நாடாளுமன்றில் அமைதியாக நிதானத்துடன் உரையாற்றினார் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, March 9th, 2016

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைவிவகாரம் மற்றும் காணாமல் போனோர் தொடர்பானஒத்திவைப்புவேளைவிவாதத்தில் நாடாளுமன்றஉறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாஉரையாற்றும்போதுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவிடாது குழப்பங்களையும் இடையூறுகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

மேற்படிவிடயம் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் நேற்றையதினம் நடைபெற்றிருந்தவேளை டக்ளஸ் தேவானந்தாவும் உரையாற்றினர்;.

பேசுவதற்கென மிகக்குறுகியநேரமே வழங்கப்பட்டிருந்தபோதிலும் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றத் தொடங்கியதும் திட்டமிட்டவகையில் உரையைக் குழப்பும் நோக்கில் கூட்டமைப்பினர் பெரும் சத்தமிட்டும் கூச்சலிட்டும்; குழப்பிக் கொண்டிருந்தனர்.

இருந்தபோதிலும் கூட்டமைப்பினரின் இடையூறுகளுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியிலும் டக்ளஸ் தேவானந்தா அமைதியாகவும் நிதானமாகவும் உரையாற்றிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

மேற்படி ஒத்திவைப்புவிவாதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்திருந்தது.

Related posts: