கூட்டமைப்பினருக்கு எதிராக கனடாவில் கடும் எதிர்ப்பு – தலைதெறிக்க ஓடிய சுமந்திரன், சாணக்கியன்!
Sunday, November 21st, 2021
கனடாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சுமந்திரன் கனடாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
அத்துடன் தற்போது கனடா சென்றுள்ள சுமந்திரனு, கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்ருந்தார்.
இந்நிலையில், கனடாவாழ் தமிழ் மக்களால் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்பகளும் முன்னெடுக்கப்பட்ட்டுள்ளது. இதனால் அப்பகுதிக்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.
இதேவேளை கூட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திலும் பார்க்க 45 நிமிடம் தாமதமாகவும் குறைந்தளவிலான மக்களோடும் ஆரம்பமாகியிருந்தது.
இந்நிலையிலேயே பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்திற்குள் பிரவேசித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சாணக்கியன் மற்றும் சுமந்திரனை மண்டபத்திலிருந்து வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
00
Related posts:
|
|
|


