குவைத்தில் அரசின் முடிவு: இலங்கயைர்களுக்கு ஆபத்தா?

Tuesday, December 26th, 2017

குவைத் நாட்டில் அரச பணிகளில் இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமர்த்தப்படுவது மட்டுப்படுத்தப்படவுள்ளது. அந்த நாட்டின் அல் அன்பா டெயிலி என்ற பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான யோசனை ஒன்றை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் காலில் அல் சாலேஹ் முன்வைத்துள்ளார்.இதன்படி விசேட நாடாளுமன்றக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதுதொடர்பில் விவாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையர்களை ஒப்பந்தம் செய்யும் போது குவைத் நாட்டவர்கள் செலுத்த வேண்டிய கட்டணமும் குறைக்கப்படவுள்ளது.அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் இது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Related posts:


மீன் ஏற்றுமதி மூலம் 106 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் - இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவிப்...
புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு - ஜனாதிபதி, பிரதமர் நிதி அமைச்சர் தலைமையில்...
பெரும்போக நெற்பயிர் செய்கை - உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 ப...