குழந்தைகளில் 20 வீதமானோர் நிறை குறைவாக உள்ளனர் – குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரிக்கை!
Thursday, August 11th, 2022
கடந்த சில மாதங்களில் சிறுவர் மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளில் 20 வீதமானவர்கள் இருந்ததை விட அதிக எடை குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்தார்.
இதே நிலை நீடித்தால், அவர்களின் வயதுக்கேற்ற எடை குறைவாக உள்ள குழந்தைகள் குழுவாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வயதுக்கேற்ப குழந்தையின் எடை அதிகரிக்காவிட்டால், அந்தக் குழந்தை அறிவு வளர்ச்சி குன்றியதாக மாறுவது மட்டுமல்லாமல், உள் உறுப்புகள் சரியாக வளர்ச்சியடையாத நோயுற்ற குழந்தையாகவும் மாறும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையை உடனடியாகத் தடுக்க, குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் வருங்கால சந்ததியினர் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


