குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்கள் உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புகளில் பதவிகளை வகிக்க தடை – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உத்தரவு!
Wednesday, February 10th, 2021
சர்வதேச விளையாட்டுத்துறை அமைப்புக்களால் குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்களுக்கு உள்நாட்டு விளையாட்டுத்துறை அமைப்புக்களில் பதவிகளை வகிக்க தடை விதிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி இவ்வாறு குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றவர்கள், உள்நாட்டு விளையாட்டு அமைப்புகளில் பதவிகளை வகிக்க ஐந்து ஆண்டுகள் தடைசெய்யப்படவுள்ளது.
இதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பாடசாலை மாணவர்களை அவர்களது விளையாட்டுத்திறன் அடிப்படையில் தேசிய பாடசாலைகளில் இணைப்பது குறித்து அவதானம் செலுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி மாணவர்கள் பாடசாலை மட்டத்தில் வெளிப்படுத்தும் விளையாட்டுத் திறன் அடிப்படையில், அவர்களை 9ம் தரத்துடன் தேசிய பாடசாலைகளில் இணைப்பதற்கான யோசனை ஒன்று குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை ககுறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


