குறை செலவு நீண்டகால மின்பிறப்பாக்கல் விரிவாக்கல் திட்டத்தை சமர்ப்பித்தது இலங்கை மின்சார சபை!

Saturday, July 22nd, 2017

நாட்டின் முதன்மை மின்சார ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோரி இலங்கை மின்சார சபை ‘குறை செலவு நீண்டகால மின்பிறப்பாக்கல் விரிவாக்கல் திட்டம்’ ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

நாட்டின் முதன்மை மின்சார ஒழுங்குறுத்துனரான இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோரி இலங்கை மின்சார சபையானது ‘குறை செலவு நீண்டகால மின்பிறப்பாக்கல் விரிவாக்கல் திட்டம்’ ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இது 2018 முதல் 2037 வரை அமுல்படுத்தப்படும் திட்டமாகும்.

இலங்கைக்கான தொடர்ச்சியான மின் வழங்கல் மற்றும் சக்தி பாதுகாப்பு ஆகிய நோக்கங்களுக்காக இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் வழியாக காண்பிக்கப்பட்ட பல்வேறு தெரிவுகளில் சிறந்ததொரு தெரிவுத்திட்டத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கை மின்சார சபையினால் நடத்தப்பட்டதும்இ மின்சார விரிவாக்கல் திட்டமிடல் கற்கைகள் பற்றியதுமான அண்மைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 20 ஆண்டு காலப்பகுதியில் 242 மெகாவோட்ஸ் பிரதான நீர்ச்சக்தி, 215 மெகாவோட்ஸ் குறும் நீர் சக்தி, ஆயிரத்து 389 மெகாவோட்ஸ் சூரியசக்தி, ஆயிரத்து 205 மெகாவோட்ஸ் காற்றுச் சக்தி, 85 மெகாவோட்ஸ் உயிர்த்திடப் பொருள் சக்தி, நான்காயித்து 800 மெகாவோட்ஸ் இயற்கை வாயு, 330 மெகாவோட்ஸ் எண்ணெய் அடிப்படையிலான சக்தி மற்றும் 105 மெகாவோட்ஸ் காஸ் டேர்பைன் சக்தி ஆகிவற்றை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது

Related posts:


நிமோனியா நோய் தொடர்பில் ஆரம்பத்தில் இனங்கண்டால் குணப்படுத்த முடியும் - அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன...
இன்று நள்ளிரவுமுதல் கோதுமை மாவின் விலை குறைப்பு - பாண் விலையும் 10 ரூபாவால் குறைவடைவதாக அறிவிப்பு!
வாகன விபத்துக்களால் இந்த வருடம் 564 பேர் பலி - காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!