குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட தரகர்கள் தொடர்பில் விடக்கப்பட்டது எச்சரிக்கை!
Saturday, June 1st, 2024
இலங்கை மக்களிடம் குறைந்த விலையில் பழைய வாகனங்களை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்யும் இருநூறுக்கும் மேற்பட்ட வாகன விற்பனையாளர்கள் மற்றும் வாகன தரகர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்கள் குறைந்த விலையில் பழைய வாகனங்களை வாங்கி மீண்டும் புதிய வானங்கள் போன்று தயார்படுத்தி விற்பனை செய்து வருகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த குழு வாட்ஸ்அப் கணக்குகள் மூலம் தகவல்களை பரப்பி, பயன்படுத்திய வாகனங்களுக்கு பெரிய சந்தையை உருவாக்கியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இந்த கடத்தல்காரர்கள் குறைந்த விலையில் பழைய வாகனங்கள் கிடைப்பதாகவும், அவற்றை சீரமைத்து புதிய வாகனங்களாக விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.
இந்த வர்த்தக மாபியா காரணமாக மக்களுக்கு சிறிய வாகனம் கூட நியாயமான விலையில் கிடைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.
அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், சில வாகன வியாபாரிகள் புதிய மோசடியாக இதனை ஆரம்பித்துள்ளதாகவும்,
இந்த வர்த்தக மாபியாக்களின் நடவடிக்கை உடனடியாக முறியடிக்கப்பட வேண்டுமெனவும் பலர் சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


