குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப புதிய திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கையிடம் கோரிக்கை!

Tuesday, June 14th, 2022

குறைந்த வருமானம் பெறும் மக்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும் திட்டங்களை வகுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய திட்டத்தை செயல்படுத்துவதில், ஒவ்வொரு நிறுவனத்திலும் சீர்திருத்தங்கள் வலுவான மற்றும் வெளிப்படையான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (13) ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே உயர்ஸ்தானிகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறல், சமமாக நடத்துதல் , நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன அனைத்து சமூகங்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டுமென உயர்ஸ்தானிகர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருட அமர்வில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கலந்து கொண்டார். அவர் நேற்று மாலை இலங்கை சார்பில் உரைநிகழ்த்தினார். மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் ஜூலை 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: