குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு 365,000 யூரியா மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம்!

குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு எதிர்வரும் பெரும்போகத்திற்காக 3 இலட்சத்து 65 ஆயிரம் யூரியா பசளை மூடைகளை வழங்க உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஒரு விவசாய குடும்பத்திற்கு தலா ஒரு யூரியா மூடை வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த பெரும்போகத்தின் போது பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குறைந்த வருமானம் பெறும் 14,000 குடும்பங்களுக்கு பாசிப்பயறு செய்கைக்கான நிதியுதவி வழங்க உலக சுகாதார மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, குடும்பம் ஒன்றிற்கு தலா 18, 000 ரூபா வழங்க அந்த அமைப்பு இணக்கம் வெளியிட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உத்தேச அரசியலமைப்பு: ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
சாப்பாட்டு பாசலின் விலையில் மாற்றம்!
இரு இளைஞர்களை தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் – பொலிசாரின் செயலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்...
|
|