குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க சீனா பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
Saturday, December 3rd, 2022
உலகின் மிகப்பெரிய கடன் வழங்குநரான சீனா குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் கடன் நெருக்கடியைத் தீர்க்க பொறுப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குநரான சீனா, நெருக்கடி சூழ்நிலைகளை சமாளிக்க கடனாளி நாடுகளுக்கு எவ்வாறு உதவியை துரிதப்படுத்தலாம் என்பதில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கூறினார்.
அடுத்த வாரம் சீன அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போது இந்த விடயம் குறித்து விவாதித்து மிகவும் பொருத்தமான தீர்விற்கான பொதுவான பொறிமுறையை ஏற்றுக்கொள்வோம் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்!
குண்டு வெடிப்பின் எதிரொலி: அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது !
வீட்டுப்பாவனை மின்சார பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தீர்மானம் இல்லை – நிதியமைச்சு தெரிவிப்பு!
|
|
|


