குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி – நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Monday, January 30th, 2023

2 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவ, அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 25 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த புதிய வரிகள் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய வரிகள் மக்களைப் பாதித்துள்ளதை தாங்கள் அறிவதாகவும் எவ்வாறாயினும் அரசின் வருவாயை அதிகரிக்கவே வரிகளை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு கடன் வழங்குனர் மற்றும் சர்வதேச நாணய நிதியமும் இதனை பரிந்துரைத்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மானியங்கள், உதவிகளை வழங்குவதற்காக அதிக வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டின் நிலைமை சீரடையும் போது, வரி விகிதங்களை மீள்பரிசீலனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
பல ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்கள் பதுக்கிவைப்பு - 52 நெல் களஞ்சியசாலைகள், 3 சீனி களஞ்சியசாலைகளுக்கு ...
இஸ்ரேல் - பலஸ்தீன மோதல்கள் நீடித்தால் எரிபொருள்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது - ஜனாதிபதி ரணில் வ...