குறைந்த வருமானமுடைய மக்களுக்கு முன்னுரிமை!
Sunday, December 24th, 2017
குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில்முன்னுரிமையளிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் பொலன்னறுவை மாவட்டசெயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை கடந்த மூன்று ஆண்டுகளில் மேம்படுத்தி அவர்களது வசதி வாய்ப்புகளைமுன்னேற்றுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்துள்ளது.
இந்நிலையில் தற்போதைய அரசாங்கம் வறுமையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதை முக்கியபணியாக மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோழி இறைச்சியின் விலை நிர்ணயம்!
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமன...
இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய நாடுகள் சபையுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளது - பிரதமர் ...
|
|
|


