கால்நடைப் போதனாசிரியர் பதவியைத் தேட ஆளில்லை!

Wednesday, October 11th, 2017

கால்நடை சுகாதார உற்பத்தித் திணைக்களத்தின் தரம் 3 போதனாசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படுவதற்கு உயர்தரம் உயிரியல் பிரிவில் கல்விகற்க மாணவர்கள் முன் வர வேண்டும் என்று திணைக்களத்தின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வசீகரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஆரம்பத்தில் 94 போதனாசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களைக் கோரியிருந்தோம். நான்கு விண்ணப்பங்களே கிடைத்தன. அதனூடாக இருவருக்கு நியமனம் வழங்கியிருந்தோம்.

92 வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை. இதற்கான காரணம் துறை சார்ந்த விஞ்ஞான கற்கைநெறி டிப்ளோமாவைப் படிப்பவர்கள் மிகவும் குறைவாக இருப்பதே. உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கற்று சித்தியடைபவர்கள் வேறு கற்கை நெறிகளை நாடிச் செல்கின்றனர்.

எனவே நேர்முகத் தேர்வின் மூலம் அவர்களை உள்வாங்கி துறைசார்ந்த டிப்ளோமாக் கற்கைநெறிகளை வழங்கவுள்ளோம். அவர்களுக்கான பயிற்சிக் காலக் கொடுப்பனவை வழங்கி பயிற்சி நிறைவடைந்தவுடன் நியமனம் வழங்கவுள்ளோம். தற்போது 56 பேர் பயிற்சி நெறிக்காக உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றார்

Related posts: