குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
Wednesday, June 13th, 2018
குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டவுள்ளது.
சமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1.38 மில்லியன் நபர்களுக்கு அதன் பயன்கள் கிடைத்துவருகின்றன.
இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும்இ தற்பொழுது சமுர்த்தி பயன்கள் கிடைக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த பயன்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் பதிவாகியுள்ளது.
இதனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் சிபார்சுடன் சமுர்த்தி பயன்கள் கிடைக்கவேண்டிய மேலும் குறைந்த வருமானத்தை கொண்ட 1 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத்தை விரிவுபடுத்துவதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி. ஹரிசன் சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts: