குயின் விக்டோரியா சொகுசு பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் இன்றையதினம் காலி, கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
களை நாசினியான கிளிபோசேட் இறக்குமதிக்குத் தடை விதிப்பு!
வடக்கில் கடும் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு - யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம்!
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!
|
|