களை நாசினியான கிளி­போ­சேட்­ இறக்­கு­மதிக்குத் தடை விதிப்பு!

Wednesday, March 8th, 2017

புற்­று­நோயை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தான களை நாசினி கிளிபோ­சேட்­டினை இலங்­கைக்­குள் இறக்­கு­மதி செய்ய தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிவிக்கப்படு­கி­றது.

குறிப்­பாக  நாட்­டின் வெவ்­வேறு பாகங்­க­ளில் கொடிய சிறு­நீ­ரக நோய்த் தொற்று ஏற்­ப­டு­வ­தற்கு கிளி­போ­சேட் பாவனை கார­ண­மாக அமைந்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே இவற்றை இறக்­கு­மதி செய்­வது தொடர்­பி­லான தடை உத்­த­ரவு ஜனா­தி­ப­தி­யி­னால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

இந் நிலையில், பெருந்­தோட்ட உரி­மை­யா­ளர்­கள் கிளி­போ­சேட் இறக்­கு­ம­தியை மேற்­கொள்ள அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு போராட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கி­றது. பிர­தா­ன­மாக தேயிலை பெருந்­தோட்­டங்­க­ளில் களை­களை அகற்­று­வது மிக­வும் செல­வி­னம் நிறைந்த செயற்­பா­டாக அமைந்­துள்­ள­மை­யால் களை­நா­சி­னி­யான கிளி­போ­சேட் இறக்­கு­ம­திக்கு அனு­ம­தி­ய­ளிக்க வேண்­டு­மென கோரி­யி­ருந்­த­தாக சுட்­டிக்கா­ட்­டப்­பட்­டுள்­ளது.

ஐரோப்பா உள்­ள­டங்­க­லான பெரு­ம­ள­வான நாடு­க­ளில் கிளி­போ­சேட் பாவ­னைக்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலே இலங்­கை­யி­லும் இந்­த­நிலை தொட­ரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது

Related posts: