குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச சேவையாக்க துறைசார்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டு – ஈ.பி.டி.பியின் யாழ் மாவமட்ட நிர்வாக செயலாளர் V.K. ஜெகன்!

Thursday, April 26th, 2018

நெடுந்தீவிற்க்கான  கடல்மார்க்க  சேவையில்  ஈடுபடும்  வடதாரகை  மற்றும்  குமுதினி  போன்று  நெடுந்தாரகையையும்  இலவச  சேவையில்  ஈடுபடுத்துவதற்கு  துறைசார்ந்தவர்கள்  விரைவான  நடவடிக்கை  எடுக்க  வேண்டுமென  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு  பிரதேச  ஒருங்கிணைந்த  கூட்டத்தின்  போதே  மக்களின் சார்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் குறித்த  கோரிக்கையை  முன்வைத்துள்ளனர்.

நீண்டகாலமாக  குறிகட்டுவானில்  இருந்து  நெடுந்தீவிற்கான  கடல்  மார்க்க  சேவையினை  குமுதினி  படகு  இலவசமாக  முன்னெடுத்து வந்திருந்தது. இதன்  பின்னர்  வடதாரகையும்  இலவச  சேவையில்  ஈடுபடுத்தப்பட்டிடுந்தது.

இந்நிலையில்  நெடுந்தாரகை  குறித்த  கடல்மார்க்க  சேவையில் ஈடுபட்டிருந்தாலும் இதற்கு பயணிகளிடம் இருந்து பணம் அறவிடுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது . நெடுந்தீவிற்க்கான  கடல்மார்க்க  சேவையில்  ஈடுபடும்  வடதாரகை  மற்றும்  குமுதினி  போன்று நெடுந்தாரகையையும் இலவச சேவையில் ஈடுபடுத்துவதற்கு  துறைசார்ந்தவர்கள்  விரைவான  நடவடிக்கை எடுக்க  வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும் மயிலும் குகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே நெடுந்தீவு பிதான வீதியை புனரமைப்பு  செய்யப்பட  வேண்டியதன் அவசியத்தையும்  வலியுறுத்தப்பட்ட  அதே  வேளை குடிநீர்  வசதியை  நெடுந்தீவு  பகுதியில்  வாழும்  சகல  மக்களுக்கும்  கிடைக்க  விரைவான நடவடிக்கை  எடுக்க  வேண்டுமென்றும்  வலியுறுத்தப்பட்டது.

அத்துடன்  கடற்தொழிலை  தமது  பிரதான  தொழிலாக  கொண்டு  வாழும்  மக்களின்  வாழ்வாதார  பொருளாதார மேம்பாட்டை  கருத்தில்  கொண்டு  தேவையான  கடற்தொழிலிற்கான  தொழில்துறை  சார்ந்த  உபகரணங்களை  வழங்குவதன் ஊடாகவே  சாத்தியமாகும்  எனவும்  சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: