குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளரின் தகவல்!

Tuesday, April 23rd, 2019

நேற்றுமுன்தினம் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல்கள் தொடர்பில் முன்னரே தகவல் அறிந்திருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை முன்னரே கிடைத்த போதிலும் தாக்குதலை தவிர்க்க போதுமான நடவடிக்கை எடுக்காது ஏன் என பாதுகாப்பு செயலாளரிடம், சர்வதேச ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர்,

சில விடயங்கள் நடக்கும் என என்னிடம் முன்னரே அறிவித்தார்கள். எனினும் இலங்கை ஜனநாயக நாடு, அவசரகால சட்டத்தை செயற்படுத்த முடியாது என்பதால் தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறைவாகவே காணப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்கு சில அமைப்புகள் பொறுப்பு கூற வேண்டும். தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மேலதிக தகவல்களை வெளியிட முடியாது.

குண்டுவெடிப்பு இடம்பெற்ற காலப்பகுதிகளில் ஹோட்டல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இனி ஹோட்டல் பாதுகாப்பிற்கு அதன் உரிமையாளர்களே பாதுகாப்பாக செயல்பட வேண்டும். அது தொடர்பான பாதுகாப்பிற்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்க முடியாது.

தேவாலயங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரியும், அது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வளவு பெரிய ஆபத்து வரும் என எதிர்பார்க்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்துக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 25 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி!
மறுபடியும் பொய் கூறுகிறது கூட்டமைப்பு –ஏமாரவேண்டாம் என்கிறார் ஈ.பி.டி.பியின் வேட்பாளர் ஶ்ரீரங்கேஸ்வர...
70 சதவீத மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஊடாக பூர்த்தி செய்வதன் மூலம் மின் கட்டணத்தை குற...