குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!
Thursday, March 3rd, 2022
இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் பொலிஸ் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்களின் அறிவாற்றலை மேம்படுத்துவதுடன், தற்போதுள்ள போதைப்பொருள் சட்டதிட்டங்களை கடுமையாக்கி, குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வேட்டைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது!
கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதற்கு ரூபா 20 மில்லியன் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள உதவிப் பணிப...
சயூராவும் நந்தமித்ராவும் வெளிநாடு பயணம்!
|
|
|


