குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை – பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் தீர்மானம்!

Friday, August 25th, 2023

நாட்டில் நிலவும் வறட்சியால் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை அவசர நிலையாக கருதி தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே இந்த கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

பிரதமரின் செயலாளர் தலைமையில் மேற்படி மூன்று அமைச்சுகளின் செயலாளர்களை உள்ளடக்கிய வகையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், துறைசார் அரச நிறுவனங்களும் இக்குழுவுடன் இணைந்து செயற்படவுள்ளன.

நாட்டில் நிலவும் கடும் வறட்சியால் குடிநீரை பெறுவதில் உள்ள சிக்கல்கள், சுகாதாரமான நீரை வழங்குவதில் உள்ள நெருக்கடிகள் பற்றி ஆராயப்பட்டு அது தொடர்பில் கருத்துகளும் பெறப்பட்டுள்ளதுடன் காத்திரமான சில முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பே...
தேசிய இலக்குகளை அடைவதற்கு அனைத்துப் பெண்களும் தங்கள் முழு ஆற்றலையும் வழங்கக்கூடிய எதிர்காலத்தை உருவா...
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் - பதில் ஜனாத...