குடிதண்ணீர் பிரச்சினைக்கு 117க்கு அழைக்கவும்!

Saturday, February 18th, 2017

நாடளாவிய ரீதியில் வறட்சியான காலநிலை காரணமாக குடி தண்ணீர்ப் பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கவும் அனர்த் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாவது,

நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 77ஆயிரத்து 789குடும்பங்களைச் சேர்ந்த 7லட்சத்து 9ஆயிரத்து 422பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குடிதண்ணீர்ப் பிரச்சினையையும் எதிர்கொண்டுள்ளனர். வறட்சியால் குடிதண்ணீர்ப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள அனைத்துப் பிரதேசங்களுக்கும் பௌசர் மூலம் குடிதண்ணீரை விநியோகிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. குடிதண்ணீர்ப் பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்கள் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தினால் உடனடியாக குடிதண்ணீர் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

w-3

Related posts: