குடாநாட்டில் 1,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் விவசாயிகள் பெரும்போகத்துக்கான சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஆயிரத்து 900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடவுள்ளனர்.
தற்போது மழையின் தாக்கம் குறைவடைந்ததைத் தொடர்ந்தே செய்கையாளர்கள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடத் தயாராகியுள்ளனர். சில செய்கையாளர்கள் உண்மை விதைகளைப் பயன்படுத்தி நாற்றுமேடை அமைத்து வருகின்றனர்.
கடந்த சிறுபோகத்தின்போது செய்கையாளர்கள் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொண்டனர். விளைச்சல் அதிகரிப்பால் இந்தக் காலபோகத்தின்போது வெங்காயத்துக்கான பற்றாக்குறை தவிர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
முன்னாள் சட்டமருத்துவ அதிகாரியே தாஜூடினின் உடற்பாகங்களை திருடினார்!
அமெரிக்க கிறீன் கார்ட் லொத்தர் சீட்டிழுப்பு ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் ஒரு நாளில் 40 கொரோனா தொற்று மாதிரி சோதனை - யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதா...
|
|