குடாநாட்டில் மழை…! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
Saturday, January 21st, 2017
யாழ்ப்பாணக் குடாநாட்டின் அனேக பகுதிகளில் நேற்று தொடக்கம் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. நேற்று. முற்பகல் 11 மணியளவில் மிதமான மழை வீழ்ச்சியுடன் ஆரம்பித்த மழை மாலை வேளையில் பல பகுதிகளில் அதிகமாக பெய்ததுடன் இன்று (21) காலையும் தொடர்ந்து பெய்துவருகின்றது.
சில பகுதிகளில் மழையுடன் பலத்த காற்றும் வீசியுள்ளது. இதனால், மழையின்மையால் ஏக்கத்துடன் வாடிய விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குடா நாட்டில் வரட்சி காரணமாக ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில தினங்களுக்கு வடக்கில் மழை பெய்யும் என வளிமண்டலத் திணைக்களம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Related posts:
அரிசி கொள்வனவில் ஊழல்: கணக்காய்வாளர் அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!
பாடசாலைகளில் பாலியல் கல்வி - கல்வி சீர்திருத்தத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரே...
|
|
|


