கிழக்கு மாகாணஆசிரியர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் – கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநரிடம் உறுதியளிப்பு!
 Wednesday, May 31st, 2023
        
                    Wednesday, May 31st, 2023
            
கிழக்கு மாகாணத்தில், 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.
கல்வி அமைச்சில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த கல்வி அமைச்சர், முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்குள், கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        